கர்த்தரின் மாம்சம் விருந்து கொள்ளுங்கள்

1. கர்த்தரின் மாம்சம் விருந்து கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்

2. துாய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம் – கர்த்தரின்

3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.- கர்த்தரின்

4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.- கர்த்தரின்

5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்- கர்த்தரின்

6. சாவின் கொடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்- கர்த்தரின்

7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்- கர்த்தரின்

8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.- கர்த்தரின்

9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.- கர்த்தரின்

10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.- கர்த்தரின்



karthdharin mamsam verunthu kollungkal

1. karthdharin mamsam verunthu kollungkal
sinththunta rathdham banam pannungkal

2. thuya rathdhaththal radsibpadainththom
narbelan perru thuthi eetrruvom – karthdharin

3. theyva kumaran, meedbin karanar
dham siluvaiyal vetrri perravar.- karthdharin

4. thame aasari, thame paliyay
dhammais seluththinar ellarkkumay.- karthdharin

5. pandai eerbaddin palikal ellam
inthdha rakasiyaththin munkuribbam- karthdharin

6. savin koodura vanmai merkondar
dham pakdharukkarul kadadsippar- karthdharin

7. unmai nenjodu sernththu varungkal
radsippin bathukappai vangkungkal- karthdharin

8. dham pakdharai iingkandu kakkirar
anparkku niththiya jeevan iikirar.- karthdharin

9. vin abpaththale thirubthi seykirar
jeeva dhanneeral thakam dheerkkirar.- karthdharin

10. ellarum dheerppu nalil vanangkum
alba omeka nammodundingkum.- karthdharin